ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூட உத்தரவிட்டதை  பாதுகாப்புப் படையினர் விரும்பவில்லை என்று தெரிகிறது.


மக்களவை தேர்தலையொட்டி, மே 31-ம் தேதி வரை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதித்து மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இத்தகைய முடிவை மாநில நிர்வாகம் எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தேர்தல் பாதுகாப்புக்காக பாதுகாப்புப் படையினர் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்புப் படையினர் தரப்பில் கூறும்போது, குறிப்பிட்ட 2 நாட்கள் மட்டும் பாதுகாப்புப்டையினர் செல்ல வேண்டும் என்பது சரியல்ல. 2 நாட்கள் போதுமானதல்ல. நினைத்த நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 5 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 35 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.