ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.  மறைந்த தலைவர்களான இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள்  வரும் நாட்களில் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது சமாதி  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ளது. அங்குள்ள  அவரது நினைவிடத்தில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் ஒவ்வொரு ஆண்டும் நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள்.  மேலும் மாவட்டம் முழுவதும் இருந்து அவரது சமூகத்தை  சேர்ந்தவர்கள், வாகனங்களில் வந்து மரியாதை செலுத்துவார்கள். இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில்,  144 தடை உத்தரவு  போடப்பட்டு உள்ளது.

அதுபோல, தேசம் தெய்வீகம் எனது இரு கண்கள் என்று கூறி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழா மற்றும் நினைவு நாள் ஒரு நாளான அக்டோபர் 30ம் தேதி  வருகிறது. இந்த நாளை அவரது சமூகத்தினர்,  தேவர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி என பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தி நடைபெற்றும்  குரு பூஜையில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வருவார்கள். அவர்கள் சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வருவார்கள். இதன் காரணமாக ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வைகையில்  144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளின் போது, கடந்த காலக்கட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இதனால் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதற்காகவே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக,  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வெளியிட்ட உத்தரவின்படி, தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (9-ந்தேதி) காலை முதல் 2 மாத காலம் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

மேலும் தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் நாளை (9-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.