அரியலூர்:
வன்னியர் சங்கத்தின் தலைவராகமறைந்த காடுவெட்டி குரு மறைவை தொடர்ந்து பாமகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், காடுவெட்டி குருவின் தீவிர ஆதரவாளரான விஜிகே மணி என்பவர் நாளை (பிப்ரவரி 1ந்தேதி) காட்டு வெட்டி குருவின் மீன்சுருட்டி கிராமத்தில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கடந்த வருடம் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நாளை பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று மறைந்த குருவின் பிறந்த நாள் விழா. இதை யொட்டி அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டி பா.ம.க மற்றும் காடுவெடி குரு குடும்பத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கிடையில், பாமகவில் இருந்து நீக்கப்பட்ட விஜிகே மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள், நாளை குருவின் பிறந்தநாளையொட்டி, அவரது கிராமத்திற்கு வந்து புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாமக மற்றும் குரு தரப்பில் இருந்து காவல் துறையில், நாகை மாவட்டம் வழுவூர் கிராமத்தை சேர்ந்த மணி என்கிற மணி எகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையினரால் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மணி என்கிற மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காடுவெட்டி மற்றும் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜனவரி 31ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் வரும் பிப்ரவரி 10ம் தேதி வரை உள்ளே நுழைய 144 தடை விதித்து உடையார்பாளையம் ஆர்டிஓ உத்தர விட்டுள் ளார். மேலும் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரியலூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மணிகண்டன் என்ற வி.ஜி.கே மணி பாமகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி. வழுவூர் மணி என்றும் அழைக்கப்படும் மணிகண்டன், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பா.ம.க தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியது.
அதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறையில் நடைபெற்ற காடுவெட்டி குருவின் இரங்கல் நிகழ்ச்சியில் பேசிய விஜிகே மணி, குருவின் பிறந்த தினமான பிப்ரவரி 1 ந்தேதி காடுவெட்டி கிராமத்தில் பாமகவுக்கு எதிராக புதிய கட்சி துவங்கப்படும் என வி.ஜி.கே மணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.