பெங்களூரு: கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கர்நாடகா மாநிலத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் கர்நாடக அரசு புதிதாக கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பெங்களூரு நகர எல்லை பகுதிக்குள் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகின்றது. மேலும், 144 அமலுக்குள் இருக்கும் பகுதிகளில் உள்ள நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், நிகழ்ச்சி அரங்குகள் போன்றவை செயல்பட தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.