‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அரசியல் நுழைவு உறுதிப்பட்டதும், ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை இறுக்கி சுமந்தபடி, ‘ஆட்சிப் பிடிப்பு’ கனவில் இருக்கும், தி.மு.க., அ.தி.மு.க. தலைமை வட்டாரத்தில், பேரதிர்வுகளை உருவாக்கிவிட்டது !
◆ 2019 மே பாராளுமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியை, திமுக தலைமையிலான கூட்டணி, தாறுமாறாக வீழ்த்தி, மகத்தான வெற்றி பெற்றது!
◆ எதிர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும், தி.மு.க. கூட்டணி, 2019 பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே மாபெரும் வெற்றியைப்பெறும் என்றும்; திமுக தனி மெஜாரிட்டி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு, சிறப்பாகவே இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் மதிப்பீடு செய்துள்ள நிலையில்…
◆ ‘இதோ-அதோ’ என்று இதுநாள் வரை சொல்லிக் கொண்டிருந்த ரஜினி, மெய்யாலுமே அரசியல் கட்சியை துவக்க முடிவு செய்துவிட்டு, மீனம் – மேஷம் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, சுபயோக சுபதினமான 2020 தமிழ் புத்தாண்டில், கட்சியின் பெயர், கொள்கை, கொடியை அறிவிக்கத் தயாராகிவிட்டார் !
◆ கட்சி துவக்குவதை, தொழிலாளர் தினமான மே முதல் நாளன்று, வைக்கலாமா என்றும், ஒரு ஐடியா இருக்கு ! எல்லாமே மார்ச் – 20க்குள் முடிவாகி, அறிவிப்பு வரும் !
◆ கட்சியின் கொள்கையும் கோட்பாடும், சட்ட – திட்டங்களும் இறுதி செய்யப்பட்டு, அதை செம்மைப்படுத்தும் இறுதிக்கட்டப் பணி, நடக்கிறது !
◆ கட்சி ஆரம்பிக்கும் பணி முடிந்த பின்னால், புயல் வேகத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து, 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பார் ! மக்களை சந்திப்பார் !
◆ 2017 டிசம்பர் 31-ம் தேதி, ‘ரஜினி ரசிகர் மன்றத்தை, ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்தார் ! அதே நாளில், “2021 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்று அறிவித்தார் !
◆ ‘அறிவாலயம்’ நிஜமாகவே அதிர்ச்சியடைந்த தேதி அதுதான் ! ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ரஜினிக்கு வேகத்தடையை போட திட்டம் வகுக்க தயாரானது ! 2017 டிசம்பர் 31ல் துவங்கிய ரஜினியை ஒடுக்கும் மிரட்டலான சிந்தனையோட்டம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 பிப்ரவரியில், அட்டகாசமாக வெளிப்பட்டது !
◆ “அதெப்படி நீங்கள் அப்படி சொல்ல முடியும்?” என்று, யாரும் நம்மைக் கேட்கலாம் ! ஆனால், அறிவாலயத்தின் மூவ்மெண்ட்டுகள், நடந்தேறிய MOU க்கள், நாம் சொல்வதை, ஏற்று, ‘சரி…’ என்று, சத்தியம் செய்கிறதே !
◆ 2020 பிப்ரவரி 2-ம் தேதி மாலை 4.34 க்கு, தி.மு.க.வின் தலைவர் மு. க. ஸ்டாலின், “Happy to share என்று உற்சாகமாகத் துவக்கி, இந்தியாவில் நிரூபிக்கப்பட்ட தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் Indian Political Action Committee / @ Indian PAC அமைப்பு, 2021 தேர்தலில் நம்மோடு சேர்ந்து பணியாற்றி, தமிழ்நாட்டின் முந்தைய சந்தோஷத்தை [ அதாவது ஆட்சியை ], மீட்டெடுக்க இணைந்துள்ளது” – என்று, தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்திருந்தார் !
◆ “கலைஞர் மட்டும்தான் இப்போது நம்மோடு இல்லை. அதன் பெருமைகளும், தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறும் பண்புகளும், தி.மு.க தலைமைக்கு இல்லாமலா போய்விட்டது? வடநாட்டு பிரமணரான பிரசாந்த் கிஷோர் ஆலோசனை சொல்லித்தான் நாம் தேர்தலை சந்திக்கணுமா ?” என்று, பழ.கருப்பையாக்கள் கொதித்தனர்!
◆ தி. மு. க. தலைவர் ஸ்டாலின், மிகப் பெரிய விலை கொடுத்து, ‘Indian PAC’ அமைப்புடன் ஒப்பந்தம் செய்த தகவல், யாரையெல்லாம் மிரள வைத்தது என்று திட்டவட்டமாக சொல்ல முடியாதுதான் ! ஆனால், ஆளும் அ.தி.மு.க தலைமை, ஏகத்திற்கும் மிரண்டு கிடக்கிறது !
தமிழக அரசின் சார்பில், நாள்தோறும் வெளியாகும் திட்ட அறிவிப்புகளும் அதனைக் தொடர்ந்து நடக்கும் அடிக்கல் நாட்டு விழாக்களும், பரபரப்பாக அணிவகுத்து வருவதிலிருந்து, நல்லாவே புலனாகிறது !
–
◆ ‘சூப்பர் லீடர்’ ரஜினி, தனது அரசியல் எண்ட்ரியை மிக பிரம்மாண்டமானதாக அமைக்க, திட்டமிடுவது கூட, மு.க. ஸ்டாலின் -பிரசாந்த் கிஷோரோடு கை கோர்த்துள்ளதின் எதிரொலிதான் !
◆ மிகவும் எளிமையாகத் தனது அரசியல் துவக்கம் அமைய வேண்டும் என்றுதான், ஏற்கெனவே திட்ட மிட்டிருந்தார் !
◆ உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த, இந்திய அரசின் பாராட்டுக்களைப் பெற்ற, கோவை மாவட்டத்தின் முன்மாதிரி கிராமத்தில், கொடி, கொள்கை, கோட்பாடுகளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவித்து விட்டு, கோவையில் அலங்கார – ஆர்பாட்ட கட் அவுட் இல்லாமல், போக்குவரத்து தடைபட்டு, மக்கள் சிரமப்படாமல் இருக்கும்படி, எளிமையாக பொதுக்கூட்டம் நடத்தவே திட்டமிட்டார் !
◆ “அதெல்லாம் வேலைக்கு ஆகாது…” என்று, இப்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார் !
◆ பிரம்மாண்டமும் வேண்டும்; அதே நேரம், மக்கள் முகம் சுளிக்காமல் ஏற்பதாகவும், பாராட்டுவதாகவும், இருக்க வேண்டும் என்று, தனது அரசியல் வருகைக்கான திட்டத்தை மாற்றிவிட்டார் !
◆ இப்படி, நாலா பக்கமும் அதிர்வுகள் உருவானதற்குக் காரணம், பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் உருவாக்கிய திடீர் ஒப்பந்தம்தான் !
◆ மோடி, நிதிஷ்குமார் , மம்தா பேனர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, கெஜ்ரிவால் ஆகியோரின் வெற்றிகளை சாத்தியமாக்கிய பிரசாந்த் கிஷோர், “நான் நினைத்தால், யாரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பேன்” என்று, கம்பீரம் காட்டும் பேர்வழி ! பிரசாந்த் கிஷோர், ” காசேதான் கடவுளப்பா…” கொள்கை கொண்டவர் !
◆ முதன்முதலாக தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. வுடன்தான், பேச்சு வார்த்தை நடத்தினார் ! பின்னர், கமலோடும், ரஜினியோடும் கூட, ரகசியம் பேசினார் ! எதுவும் ‘ஒர்க்-அவுட்’ ஆகாத நிலையில், தி.மு.க வோடு ‘வெய்ட்’டாக பேரம் பேசி, தனது கொள்கையில் உறுதியாக இருந்து, ஒப்பந்தம் செய்துவிட்டார் !
◆ ரஜினியின் இமேஜை, டிசைன் டிசைனாக உடைக்கும் வேலைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து முழு வீச்சில் நடத்த வேண்டும் என்பதே, பிரசாந்த் கிஷோர் பிளான் !
◆ ஒப்பந்தம் உருவாகும் முன்பே, ஸ்டாலினிடம் 2019 ஜூலை முதல் வாரத்தில், பிரசாந்த் கிஷோர் கொடுத்த முன்னோட்டமான ‘Winning Idea’ ப்ரொஜெக்ட் ரிப்போர்ட்டில், அடிக்கோடிட்டு, ‘Rajini Danger’ பற்றி, விரிவாக
சொல்லியிருந்தார் !
◆ கிஷோருடன் ஒப்பந்தம் உருவான 3-வது வாரத்தில், ரஜினி இமேஜை தவிடு பொடியாக்கும் வேலை, அட்டகாசமாகத் துவங்கிவிட்டது !
◆ ஆமாம்; வெற்றிகரமாகத் துவங்கிவிட்டது !
◆ பிரபல சினிமா டைரக்டர் தாராபுரம் ஆர். சுந்தரராஜன், ‘கேப்டன்’ விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’, ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து, 175 நாள் ‘ஓஹோ’ என்று ஓடி, வசூலில் சாதனை செய்த ‘ராஜாதி ராஜா’ உட்பட
ஒரு டஜன் படங்களை இயக்கியவர் ! சிறந்த நடிகரும்கூட !
◆ எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ரசிகரான இவர், அ.தி.மு.க கூட்டம் ஒன்றில் 27.2.2020 அன்று பேசினார் ! அப்போது, ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை ‘நாய்’ என்றும்; “ரஜினி கட்சியை ஆரம்பித்து, கோயம்புத்தூரில் கூட்டம் போட்டுப் பேசிவிட்டு, திருப்பூர் வர்றதுக்குள்ள, செத்துப் போயிடுவார்…” என்றும் கீழ்த்தரமாகப் பேசினார் !
◆ அடுத்த நாள், 28-02-2020 அன்று, சமூக வலைத் தளங்களில், ‘டைரக்டர் ஆர்.சுந்தரராஜன் திடீர் மரணம்…’ என்று, செய்திகள் ‘கொரோனா’ ஸ்பீடில் பரவியது !
◆ அடுத்த நாள், 29-02-2020 அன்று, டைரக்டர் ஆர்.சுந்தரராஜனின் மகன் அசோக், “இல்லே இல்லே, அப்பா நல்லாதான் இருக்கிறார்” என்று, அறிக்கை வாசித்தார் ! அத்தோடு சரி !
◆ கலைஞர் கருணாநிதியை ‘நாய்’ என்று கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசியதை பொறுக்க மாட்டாத தி.மு.க. தரப்பு,
அதன் இயல்புப்படி, இயற்கையாகவே பொங்கி எழுந்து, பிரசாந்த் கிஷோர் ரூட்டில், டைரக்டர் ஆர்.சுந்தர ராஜனை, சமூக வலைத்தளங்களில், ‘உற்சாகமாக’ சாகடித்துவிட்டது ! இது, முள்ளை முள்ளால் எடுக்கிற நாகரீகமான ‘ஆப்பு’ வித்தை !
◆ அத்தோடு நில்லாமல், ”ரஜினி செத்துப் போயிடுவார்”னு சொன்னதால், ஆத்திரம் கொண்ட ரஜினி ரசிகர்கள் தான், “டைரக்டர் சுந்தரராஜன் செத்துப் போய்ட்டார்…” என்று, செய்தியைப் பரப்பி, பழி தீர்த்தார்கள் என்றும், ஒரு ‘டகுல்’ செய்தியை, போனசாகப் பரப்பியது, பிரசாந்த் கிஷோர் டீம் !
◆ டைரக்டர் ஆர். சுந்தரராஜன் தரப்பு, ‘திருடனை தேள் கொட்டிய கதை’ போல, ‘கப்-சிப்’ ஆனதே தவிர, அ.தி.மு.க தலைமையிடம் புகார் கொடுத்து, அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சும்மானாச்சும்கூட கேட்கவே இல்லை ! காரணம் : சுந்தரராஜனின் வாய்க் கொழுப்பு, YouTube வழியாக ஒழுகியபடியே இருந்ததுதான் !
◆ அதிமுக தலைமையும் சுந்தரராஜனின் வாய்க் கொழுப்பை ரசிக்கவில்லை ! இந்தக் கோளாரான விஷயத்தில் தலையிட்டு, சுந்தர்ராஜனுக்கு வக்காலத்து வாங்கினால், ‘முரசொலி’யின் சவுக்கடியை யார் வாங்குவது ? ஈபிஎஸ்ஸா ? ஓபிஎஸ்ஸா ? எனவேதான், அதிமுக தலைமை ‘கப்சிப்’ !
◆ ‘கில்லாடி’ பிரசாந்த் கிஷோர் டீம், கலைஞரை கீழ்த்தரமாகப் பேசிய டைரக்டர் சுந்தரராஜனுக்கு பாடம் புகட்டியதோடு; அந்தப் பழியை ரஜினி ஆதரவு வட்டாரத்தின் மீது ‘லேசா’ தூக்கிப்போட்டு, மிரள வைத்து விட்டது…!
◆ ரஜினியை பின்பற்றுபவர்கள், கீழ்த்தரமான ‘கெட்டப் பசங்க’ என்று சித்தரித்துக் காட்டி, ‘கெக்கெக்கே’ என்று சிரிக்க ஆரம்பித்து விட்டது !
◆ முதல் ரவுண்டிலேயே, கிஷோர் – ஸ்டாலின் கூட்டணி 200% வெற்றி ! ஒரு கல்லில் இரண்டு மாங்காய் ! அதாவது, இரண்டு 100% வெற்றி !
◆ இப்படியான தரம் தாழ்ந்த அரசியல் தாக்குதலை, ‘சூப்பர் லீடர்’ ரஜினிகாந்த், எப்படி சமாளிக்கப் போகிறார் ? ஆட்சியை எப்படிக் கைப்பற்றப் போகிறார் ?
◆ அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்கொண்டு, களம் அமைத்து, வெற்றிப்பெற முடியும் என்று நம்பிக்கையோடு புறப்படும் ரஜினி, பிரசாந்த் கிஷோர் என்ற ஆயிரம் கால் பூதத்தையும் அதன் முரட்டுத் தாக்குதலையும் எப்படி சமாளிப்பார் ?
◆ ‘சூப்பர் லீடர்’ ரஜினி, தி.மு.க.வையும் சமாளிப்பார் ! தி.மு.க. வின் தேர்தல் கால ‘ஒப்பந்த மூளை’யான பிரசாந்த் கிஷோரையும், சிறப்பாகவே சமாளிப்பார் !
◆ 2020 மார்ச் 5 அன்று, ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும், இதையொட்டி நடந்த நிருபர்கள் கூட்டத்தில் ரஜினி திட்டவட்டமாக செய்த சில நுணுக்கமான அறிவிப்புகளும்…
◆ “எதிர்ப் பக்கம் உள்ள அவரது அரசியல் போட்டியாளர்களை சமாளித்து வெற்றிக்கொள்ளும் திறனை, நிரூபித்து விட்டது” என்று, அரசியல் நோக்கர்கள், கருதுகின்றனர் !
◆ ரஜினியின் மனதில் சிறப்பாக இடம்பெற்றிருந்த தலைவர் ஒருவரின் மகன், ரஜினியின் அரசியல் பயணத்தில் முக்கியப் பங்காற்ற இருக்கிறார் ! அவரது தந்தை கட்சியை நடத்தியபோது இருந்த தேர்தல் சின்னமே ரஜினியின் தேர்தல் சின்னமாக இருக்கும் !
◆ ஒரு வகையில், அது ரஜினிக்கு சொந்தமான சின்னம்தான் !
◆ இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியைப் பதிவு செய்யும் நடைமுறைகளை, நம்பிக்கையான வழக்கறிஞர்கள் துணையோடு, ரஜினி துவக்கிவிட்டார் !
● அடுத்த வெள்ளிக் கிழமை தொடரும்…!