பலாத்கார சாமியார் படுக்கை அறையில் பெண்கள் வந்து போக சுரங்கப்பாதை : பரபரப்பு தகவல்

Must read

சிர்சா

தேரா சச்சா ஆசிரமத்தில் ராம் ரஹிம் அறையில் இருந்து பெண் சீடர்கள் தங்கி உள்ள இடத்துக்கு சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீமுக்கு பெண் சீடர்களை பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது,   தற்போது அவர்  சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.   கடந்த வெள்ளிக்கிழமை முதல் தேரா சச்சா ஆசிரமத்தை அதிகாரிகள்  சோதனை இட்டு வருகின்றனர்.    ரொக்கப்பணம், ஏராளமான கணக்கில் காட்டப்படாத விலையுயர்ந்த பொருட்கள், மற்றும் பல ஆவணங்கள் சிக்கியுள்ளன.

நேற்று நடந்த சோதனையில் குர்மீத் ராம்ரஹீமின் அறையில் ஒரு சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   அந்த சுரங்கப்பாதை சாமியாரின் அறையிலிருந்து பெண் சீடர்கள் தங்கும் விடுதி வரை செல்கிறது.   அதன் மூலம் பெண் சீடர்களை தனது அறைக்கு அழைத்து வந்து சாமியார் காமக் களியாட்டங்களை நிகழ்த்தியதாக சோதனைக் குழுவினர் சந்தேகப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆசிரமத்தினுள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் ரகசியமாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயனங்களை சோதனை செய்ததில் அவை பயங்கரமான வெடி பொருட்கள் என கண்டறியப்பட்டுள்ளது.  அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடி உள்ளனர்.

சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

More articles

Latest article