டில்லி:
மூலதன சந்தையில் செயல்பட விஜய்மல்லையாவின் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது.
விஜய் மல்லையாவின், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சட்டவிரோத நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டதன் காரணமாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இயக்குனர்களை வைத்திருந்ததால், செபி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேலும், விஜய்மல்லையா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் அசோக் கபூர் மற்றும் அதன் முன்னாள் சி.என்.ஏ பி.அ முரளி ஆகியோருக்கும் ஓராண்டு தடை செபி தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் பேரில், சட்டவிரோத நிதி வழிகாட்டு தல்களுடன் தொடர்புடைய வழக்கில், பங்குச்சந்தைகள் சந்தைகளில் இருந்து, மல்லையா மற்றும் கேபார் மற்றும் முரளி உட்பட 6 முன்னாள் அதிகாரிகள் தடை செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த 5 வருட காலமாக பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் முக்கிய நபராக பதவி வகிப்பதில் இருந்தும் அவர் தடை செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி மாதம், டிஐஜியோவுடன் ஒப்பந்தம் போடப்பட்டதை தொடந்து, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மல்லையா நியமிக்கப்பட்டிருந்தார்.
யுபி குழும நிறுவனங்களுக்கு நிதியை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்குவதற்கு USL ஊழியர்களிடம் மல்லையா அழுத்தம் அளித்ததாகவும் செபி குற்றம் சாட்டி உள்ளது.