மும்பை

னில் அம்பானி மற்றும் 3 பேருக்குப் பங்கு வர்த்தக்தில் ஈடுபட செபி தடை விதித்துள்ளது..

ரிலையன்ஸ் ஹோம் ஃபினனன்ஸ் என்னும் நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார்.   இந்நிறுவனம் அதிக அளவில் கடன் வாங்கி தற்போது கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால் இது பூஜ்ய நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  பங்கு பரிவத்தனை வாரியமான செபி இந்த நிறுவனத்தின் கடன் அளவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது/

இந்நிலையில் செபி வெளியிட்டுள்ள அறிக்கையில்  தொழிலதிபர் அனில் அம்பானி, அமித் பாப்னா, ரவீந்திர சுதாகர், பிங்கேஷ் ஆர் ஷா ஆகியோருக்கு பக்கு வர்த்தக செய்யத் தடை விதித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த 4 பேருடன் எவ்வித பங்கு வர்த்தக பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளக் கூடாது எனவும் செபி எச்சரித்துள்ளது.

இதில் ரிலையன்ஸ் ஹோம் ஃபினான்ஸ் நிறுவனத்தின் தணிக்கை விவகாரங்களில் இனி ஈடுபட மாட்டோம் என பிரைஸ் வாட்டர் நிறுவனம் விலகியதும் இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. தவிர இந்த நிறுவனத்துக்குக் கடன் அளித்துள்ள நிறுவனங்கள் புகார் அளித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செபி தெரிவித்துள்ளது.  தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள 4 பேரும் ரிலையன்ஸ் ஹோம் ஃபினான்ஸ் நிறுவன முக்கிய புள்ளிகள் ஆகும்.