டில்லி
மக்களவை இருக்கை ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மக்களவை தேர்தல் முடிந்து நேற்று பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்துள்ளது. புதிய மக்களவை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அபோது யார் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த விளக்கங்கள் நமது வாசகர்களுக்காக இதோ.
தற்போது மக்களவையில் 54 இடங்கள் உள்ளன. அதன்படி நாடு 543 தொகுதிகளாக பிறிக்கப்பட்டன. பொதுத் தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதி வாக்களர்களும் ஒருவரை தேர்ந்தெடுத்து 543 உறுப்பினர்கள் உள்ளனர். எனினும் இந்த அரங்கில் 550 பேர் அமர இடவசதி செய்யப்பட்டுள்ளன.
அரை வட்ட வடிவில் சபாநாயகரை சுற்றி ஆறு பிளாக்குகளும் ஒவ்வொரு பிளாக்கிலும் 11 வரிசையிலும் இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கைகள் அனைத்தும் சபாநாயகரை பார்க்கும் படி அமைக்கபட்டுள்ளன. இவ்வாறான அமைப்பில் உள்ள இருக்கைகளில் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு நடைபெறுகிறது.
மக்களவை விதிகளின் படி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எங்கு அமர வேண்டும் என்பதை சபாநாயகர் முடிவு செய்யவேண்டும் என உள்ளது. அதன்படி மொத்தமுள்ள ஆறு பிளாக்குகளில் கட்சியின் எண்ணிக்கையை மற்றும் அந்த கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்து இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மக்களவையில் முதல் வரிசையில் 22 இருக்கைகள் உள்ளன. சபாநாயகருக்கு வலது புற இறுக்கைகளில் எதிர்கட்சிகளும் இடது புறத்தில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் கட்சி உறுப்பினர்களும் அமர்வார்கள். மரபுப்படி மக்களை துணை சபாநாயகர் முதல் வரிசையில் சபாநாயகருக்கு எதிரில் அமரவேண்டும். ஆயினும் அவர் இடது புற முதல் வரிசையில் எதிர்க்கட்சிகளுடன் அமர்வது வழக்கமாக உள்ளது.
முதல் வரிசையில் கட்சிகள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யபடுகின்றன. குறிப்பாக தற்போது முதல் வரிசையில் 20 இருக்கைகள் உள்ளன. பாஜகவினர் தற்போது 303 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள இருக்கைகள் 550 ஆகும்.
மொத்த கட்சி உறுப்பினர்கள் X வரிசையில் உள்ள இடங்கள் / மொத்த இருக்கைகள்
என கணக்கிடப்பட்டு முதல் வரிசையில் 11 பேர் அமர்த்தப்பட உள்ளன்ர்.
அதை போல் பாஜக கூட்டணிக்கான 352 பேரை கணக்கிடும் போது 13 பேர் வரை அமர வைக்கப்படலாம். பொதுவாக கட்சிகளுக்கு ஒவ்வொரு வரிசையில் எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்த பின்னர் அந்த இருக்கைகளை உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்வது வழக்கமாக உள்ளது.
கடந்த 2014 ஆம் வருடம் மக்களவையில் பாஜக 282 இடங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி 343 இடங்களையும் பெற்றிருந்தது. இதனால் அந்த கூட்டணி உறுப்பினர்கள் ஆறில் நான்கு பிளாக்குகளில் அமர்ந்தன்ர். தற்போது 353 பேர் என்பதல் அதை முறை பின்பற்றப்பட உள்ளது.
முந்தைய மக்களவையில் காங்கிரஸ் தனியாக 44 இடங்களிலும் கூட்டணியாக 59 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தற்போது காங்கிரஸ் தனியாக 59 இடங்களிலும் கூட்டணியாக 91 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த கட்சிக்கு அதே கணக்கின்படி இட ஒதுக்கீடு செய்யபபட உள்ளது.