சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில்  தொகுதி பங்கீடு செய்வதில் சிக்கல் தொடரும் நிலையில், அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் டெல்லி செல்கிறார்.  ஏற்கனவே கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இன்று மீண்டும் டெல்லி செல்கிறார்.

தமிழ்நாட்டில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்ளன. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப் பதிவும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுக கூட்டணியில் ஏற்கனவே தொகுதி பங்கீடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் அதற்கான எந்தவொரு முகாந்திரமும் தெரிய வில்லை.  அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  இதைத்தொடர்ந்து தொகுதி பங்கிடு குறித்து பேசி,  தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை  (மார்ச் 20ந்தேதி) சென்னை வர உள்ளார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார. பாஜக தரப்பில், சென்னையில் கணிசமான தொகுதிகளில்  போட்டியிட திட்டமிட்டு உள்ளதால், கூடுதல் தொகுதிகளை  அ.தி.மு.க கூட்டணியில்   கேட்டுப்பெறுவதில்  சிக்கல் நீடித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து,  அ.தி.மு.க. – பா.ஜ.க இடையே தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்ய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை டெல்லி செல்கிறார். எஸ்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தொகுதிப்பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து அமித்ஷாவுடன் இ.பி.எஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]