ர்ணாகுளம்

கேரள மாநிலத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது,

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதா; கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பாரதப்புழா, நீலேஸ்வரம், மணிமாலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் செல்லாளம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கண்ணமாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மார்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. எனவே அப்பகுதிமக்கள் தண்ணீரில் தத்தளித்தனர்.

குடியிருப்பு பகுதியில் கடல்நீர் புகுந்ததால் பலரும் தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  கடல் சீற்றத்தாலும், கடல் அரிப்பாலும் பெரிதும் பாதிக்கப்படும் இந்த பகுதியில், தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.