மைசூரு

ர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழாது என மத்திய அமைச்சர் குமாராசாமிக்கு முதல்வர் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் மத்ஹ்டிய தொழில்துறை அமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான குமாரசாமி விரைவில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என தெரிவித்திருந்தார்.  இது கர்நாடக அரசியலில் பெரும் பரப்பரப்பை உண்டாக்கியது. மைசூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமயா செய்தியாளரளை சந்தித்துள்ளர்.

அப்போது சித்தராமையா செய்தியாளர்களிடம்,

”ஊழலின் தாத்தா பாஜகதான். 40 சதவீத ஊழல் என்று பாஜக ஆட்சியைத்தான் குறிப்பிட்டோம். முந்தைய பாஜக ஆட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கு 40 சதவீத கமிஷன் கேட்டதாக கா்நாடக ஒப்பந்ததாரா் சங்கத் தலைவா் டி.கெம்பண்ணா குற்றம் சாட்டியிருந்தார்.

மத்திய தொழில் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி காங்கிரஸ் அரசு கவிழும் என்று கூறியிருக்கிறாா். மத்திய மந்திரியாக எச்.டி. குமாரசாமி எத்தனை நாள்கள் நீடிக்கப்போகிறாா் என்பதைப் பார்க்கலாம்.

மக்கள் 136 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவளித்து வெற்றியைத் தந்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மஜத 37 இடங்களில் வென்றிருந்தது. அத்துடன் கடந்த ஆண்டு நடந்த தோ்தலில் மஜத 19 இடங்கள் மட்டுமே அந்தக் கட்சிக்கு கிடைத்தன

என்று தெரிவித்துள்ளார்.