சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
கொரோனா பேரிடர் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந் நிலையில் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பாடங்களில் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முதல் நாளான இன்று குறைந்த எண்ணிக்கையிலே மாணவர்கள் வந்தனர்.