சென்னை: 10வது 12வது வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிக்கு வர விருப்பமிருந்தா வரலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். மற்றவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த (2020) மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர் டிசம்பர் 1ந்தேதி முதல் இறுதியாண்டு இளநிலை, முதுநிலை மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வித்துருறை ஆலோசனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 10, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மட்டுமே கொரோனா நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால் சுமார் 10 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க தயாராகி வருகிறது. பள்ளி வகுப்புகள், சுற்றுப்புற பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இநத் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் “மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய ஆலோசனையில் 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜனவரி 19 முதல் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் முதல்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளி செல்லலாம். மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.