புனே: மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இதுவரை 15.17 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதே போன்று அங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் 15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந் நிலையில் மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் நிச்சயம் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.