சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8ம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதன் பேரில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளிகள் திறப்பை அரசு தற்காலிகமாக ரத்து செய்தது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8ம் வரை கருத்து கேட்புக் கூட்டம் நடத்த அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
கருத்துக் கேட்புக் கூட்டத்தின் அடிப்படையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி தெரிவித்து உள்ளது.