ஐதராபாத்: தெலுங்கானாவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின்னர் மத்திய அரசு தளர்வுகளை அறிவிக்க, அதன்படி படிப்படியாக பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட செய்தியில், பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:  முதல் கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.