அமராவதி:ஆந்திராவில் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பது குறித்து, அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அக்டோபர் 5ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதாக இருந்தது.
அன்றைய தினமே மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், சாக்ஸ், பெல்ட் உள்ளிட்டவை வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பள்ளிகளை மீண்டும் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. எனினும் அக்டோபார் 5ம் தேதி பாடப் புத்தகம் மற்றும் பள்ளி சார்ந்த உபகரணங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.