சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக துவங்கியுள்ள நிலையில் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் நீரில் மிதக்கின்றன.

இன்று மாலை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதை அடுத்து பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மருந்து கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மட்டும் நடைபெறும் என்றும் தனியார் நிறுவனங்கள் தேவையான குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]