சென்னை: பள்ளி கல்வித்துறை சார்பில்  நடப்பு கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் வேலைநாட்கள் குறைக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 2024-25ம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது,  பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியீடப்பட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என  பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக,   பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பார்வை ( 2 ) ல் கண்டுள்ள கடிதப்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது . இப்பொருள் சார்ந்து பெறப்பட்ட கருத்துக்கள் நடைமுறையில் உள்ள அரசாணைகள் பார்வை ( 2 ) ல் கண்டுள்ள சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது. பார்வை ( 3 ) ல் கண்டுள்ள சட்டத்தின்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 10 ம் தேதி திறக்கப்பட்டமை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு 6 முதல் 8 வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள வேலை நாட்களின் அடிப்படையில் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கும் 220 வேலை நாட்கள் ( 210 நாட்கள் கற்றல் – கற்பித்தல் , தேர்வுகள் உள்ளிட்டவைக்கும் 10 நாட்கள் பயிற்சி உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும் ) என நிர்ணயம் செய்து 2024-25 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய நாட்காட்டி இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . இதனை சார்நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட நாட்காட்டியில்,  . வழக்கமாக ஓராண்டில் 210 நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். ஆனால் புதிய கல்வியாண்டில் பல்வேறு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு மொத்த வேலை நாட்கள் 220ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சனிக்கிழமை வேலைநாட்கள் என்று 19 19 சனிக்கிழமை பணி நாட்  பட்டியலையும் வெளியிட்டிருந்தது. அத்துடன், ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி குறித்த வழிகாட்டியும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி எபந்தது. இதையடுத்து, தற்போது திருத்தப்பட்ட  நாட்காட்டி வெளியிடப்பட்டு உள்ளது.