பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணிதத் திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும் , எண்ணும் எழுத்தும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 8 வயதுள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறனுடையவர்களாக மாற்றுவதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில், அரும்பு, மொட்டு, மலர் என மூன்று படிநிலைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அரும்பு படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். மொட்டுக்கள் என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்களை மாணவர்கள் வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். மலர் என்கிற படிநிலையில் சரளமாக வாக்கியங்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ( Hi – Tech ) ஆய்வகங்கள் மூலம் இணைய வழி பயிற்சி நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளனர்