புதுடெல்லி:

ந்தியாவை பாரதம் என்றும் வார்த்தையாக மாற்றுவது குறித்த வழக்கு  நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்தியாவை பாரதம்  அல்லது ஹிந்துஸ்தான் என்று ஜனநாயக முறைப்படி அழைக்க வேண்டும் என்றும், இந்தியா என்று அழைப்பது நமது நாட்டின் பெருமையை அவமதிக்கும் வகையில் இருப்பதாவும்,  மத்திய அரசு வலியுறுத்தும் வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு எண் ஒன்றில் மாற்றம் கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு, நாட்டின் பெயர் மற்றும் யூனியம் பிரதேசம் போன்றவற்றை கையாளுகிறது. இந்த சட்டத்தின்படி,  இந்தியாவை பாரதம்/ஹிந்துஸ்தான் என்று பெயரிடலாம் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் விசாரணை , அபேக்ஸ் நீதிமன்றத்தில்  கடந்த வெள்ளிக்கிழமை  தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த நாளின் நீதிபதி வராததால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இதையடுத்து,  ஜூன் 2-ஆம் தேதி  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில்  இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவரால்  தொடரப்பட்ட இந்த வழக்கில்,   இந்தியா என்ற வார்த்தையை பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என்றும் மாற்றம் செய்யும் சட்டத்திருத்தம் இந்த நாட்டின் குடிமக்கள் காலனித்துவ கடந்த காலத்தை மீறுவதை உறுதி செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார்.


மேலும் அந்த மனுவில், நாட்டின் சின்னமாக விளங்கும் அந்த வார்த்தையில் உள்ள ஆங்கிலத்தை நீக்க வேண்டும் என்றும், இது நமது தேசத்தின் பெருமையை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. குறிப்பாக எதிர்கால தலைமுறையினை பாதிக்கும். உண்மையில் இந்தியா என்பதை மாற்றி பாரதம் என்றும் மாறுவது, சுதந்திர போராட்ட வீரர்களின் கடின முயற்சியை விளக்கும் வகையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1948 அரசியலமைப்பு கூட்டத்தில் சட்ட பிரிவு ஒன்றை வரையறுத்தையும், அந்த நேரத்திலேயே இந்தியா என்ற பெயரை பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறத்த்ப்பட்டதையும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டை அதன் உண்மையான பெயரால் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.