டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை  9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

கேரளத்தின் சபரிமலை கோயில் உட்பட மத தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்கும் என அறிவித்துள்ளது. இநத் வழக்கு ஏபரல் 7ந்தேதி முதல் விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து ஏராளமான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,  இந்த மனுக்களை விசாரிக்க   புதிதாக 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று கூறினார். இந்த மனுக்கள் மீது ஏப்ரல் 7ந்தேதி  முதல் 22ம் தேதி வரை 9 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் எனவும் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான வாதங்களை ஏப்.7 முதல் 9ம் தேதி வரை  சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மறுஆய்வு மனுதாரர்கள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் தரப்பினரின் மனுக்கள் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை விசாரிக்கப்படும்.

மறுஆய்வு மனுக்களை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் அசல் ரிட் மனுதாரர்களின் மனுக்கள் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை விசாரிக்கப்படும்.

ஏப்ரல் 14ந்தேதி கேரள மாநில அரசு தரப்பில்  தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மறுஆய்வு சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருந்தால், ஏப்ரல் 21 அன்று எடுத்துக்கொள்ளப்படும்.

அமிகஸ் கியூரியின் இறுதி மற்றும் இறுதி சமர்ப்பிப்புகள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கன்னி தெய்வமான சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுதிக்கப்படாதது காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வழக்கத்தை உடைக்கும் நோக்கில் சில பெண்கள், அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, சில பெண்கள் அங்கு சென்று சர்ச்சையை ஏற்படுதியதும் அனைவரும் அறிந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரிதத உச்சநீதிமன்றம்,  , கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கொடுத்தது. அதன்படி இனி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு போகலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. கேரள மாநிலத்தில், அனைத்து மதத்தினரும் உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக குரல் எழுப்பினர். மேலும்,  இந்து அமைப்புகள் இந்த தீர்ப்பை எதிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடமால்,   இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சீராய்வு மனுக்களுக்கு ஆதரவான ஆதாரங்களை திரட்டி கொடுப்பது, வழக்கறிஞர்களாக வாதங்களை முன்வைப்பது என்கிற பணிகளை மேற்கொண்டன.

இதன் பின்னணியில், உச்சநீதிமன்றத்தின் 2018 தீர்ப்புக்கு எதிராக 65க்கும் அதிகமான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் நாயர் சர்வீஸ் சொசைட்டி, பந்தளம் அரச குடும்பம் சார்பில் தாக்கல் செய்பய்பட்ட மனுக்கள் முக்கியமானவை. இந்த 2அமைப்புக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் எந்த மாதிரியான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இன்று இந்த சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இந்த வழக்குகள் 9 தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதி கூறியிருக்கிறார்.

[youtube-feed feed=1]