உத்தரப்பிரதேசம்:
லக்கிம்பூர் வன்முறை வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது.

லக்கிம்பூர் வன்முறை வழக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கும் நாளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி அரசு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் கார்களில் சென்று கொண்டிருந்தனர். திகுனியா என்ற பகுதியில் அவர்கள் காரில் சென்றுகொண்டிருந்த போது அங்குக் குவிந்த விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து வன்முறை மூண்டது. இதில் மொத்தம் 9 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, உத்தரப்பிரதேச காவல்துறையினர் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு எதிராக திக்குனியா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
ஆஷிஷ் மிஸ்ரா மீது 302 (கொலை), 304-ஏ (கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் மரணம்), 120-பி (கிரிமினல் சதி), 147 (கலவரம்), 279 (அவசர வாகனம் ஓட்டுதல்) மற்றும் 338 (அலட்சியத்தால் கடும் காயம்) .
மத்திய அமைச்சரவையிலிருந்து அஜய் மிஸ்ராவை நீக்குவதோடு, ஆஷிஷ் மிஸ்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந்நிலையில், இந்த வன்முறையைத் தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன் பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel