டில்லி

ச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகளின் மைக்குகளை புதிப்பிக்க ரூ.91.91 லட்சம் செலவானதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் முன்பு ஒரு மைக் வைக்கப்பட்டிருக்கும்.  அதன் மூலம் அவர்கள் தங்களின் கேள்விகளை வழக்கறிஞரிடமும், குற்றவாளிகளிடமும் அல்லது சாட்சிகளிடம் கேட்பதற்காக அந்த மைக் வைக்கப்பட்டு உள்ளது.   ஆனல் அந்த மைக்குகளுக்கு பதிலாக மைக்ரோஃபோன்கள் பொருத்தப் பட்டன.  இந்த நவீன மயமாக்கலான செலவு எவ்வளவு என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு சட்ட மாணவர் கபில்தீப் அகர்வால் மற்றும் வழக்கறிஞர்களும் மற்றும் பொது நல தொண்டு நிறுவனமான விசில் அமைப்பை சேர்ந்தவர்களுமான குமார் ஷானு மற்றும் பரஸ் ஜெயின் ஆகியோரால் அளிக்கப்பட்டிருந்தது.  அதில் “உச்சநீதிமன்றத்துக்கு இன்றியமையாத இந்த மைக் இரண்டு பகுதிகளாக நவீன மயம் ஆக்கப்பட்டது. கோர்ட் நம்பர் 1 முதல் 5 மற்றும் பதிவாளர்கள் 1 – 2 ஆகியவை முதல் பகுதியாகும்.  இதற்கு மொத்தம் ரூ.38,79,627 செலவானது.  கோர்ட் நம்பர் 6 முதல் 15 வரை உள்ள இரண்டாம் பகுதிக்கு ரூ.53,16,232 செலவாகி உள்ளது” எனக் கூறி உள்ளது.

மனுவை அளித்த வழக்கறிஞர்கள். “புது வகை மைக்ரோஃபோன்கள் அமைக்கப்பட்டும் நீதிபதிகள் முன்பு உள்ள மைக்குகள் நீக்கப்படவில்லை.  இன்றும் பெரும்பாலான நீதிபதிகள் தங்கள் முன்னால் உள்ள மைக்கை தான் உபயோகப் படுத்துகின்றனர்.  அநேகமாக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆன நீதிபதிகளே மைக்ரோஃபோன்களை உபயோகிக்கின்றனர்.  இப்படி நீதிபதிகளால் உபயோகப்படுத்தப் படாத மைக்குகள் புதிப்பித்தலுக்கு மக்களின் வரிப்பணத்தை வீணே செலவு செய்துள்ளதை நாட்டுக்கு தெரியப்படுத்தவே இந்த மனுவை அளித்தோம்” என கூறி உள்ளனர்.