டெல்லி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
விவசாயிகள் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் நிலையில் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப் – அரியானா எல்லையான கனவுரியில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கடந்த மாதம் 26 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இதானல்அவரது உடல்நிலை மோசமடைந்த போதிலும் சிகிச்சைககு மறுத்து போராட்டத்தை தொடர்கிறார்., விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான வழக்கு கடந்த 18 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உண்ணாவிரதம் இருக்கும் தலேவாலின் உடல்நிலையை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், பஞ்சாப் அரசாங்கம் தாமதமின்றி மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தலேவாலுக்கு மருத்துவ உதவி வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாததற்காக பஞ்சாப் அரசின் தலைமைச் செயலருக்கு எதிரான அவமதிப்பு மனு தொடர்பாக பஞ்சாப் அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.