டில்லி

யோத்தி வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தல்ளுபடி செய்தது.

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குறிய 2.77 பரப்புள்ள நிலத்துக்கு பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடினர்.  இந்த வழக்கில்  அலகாபாத் உயர்நீதிமன்றம் சன்னி வக்ஃப் வாரியம், ராம் லீலா மற்றும் நிர்மோகி அகாரா ஆகிய 3 அமைப்புகலும் சமமாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என கடந்த 2010 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 13 அமைப்புகள் மேல் முறையீடு செய்துள்ளன.    மேல் முறையீடு வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அசோக் பூஷன், நஜீப் ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி உளபட பலர் மனுக்களை அளித்திருந்தனர்.

இன்று உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கில் இனி யாரையும் இணைக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.   மேலும் முதலில் போடப்பட்ட மேல் முறையீடு வழக்கு மட்டுமே விசாரிக்கப்படும் எனவும் வழக்கின் விசாரணை வரும் 23ஆம் தேதி நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.