டில்லி

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரிய சிபிஐ மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மூத்த காங்கிரஸ் தலைவரான ப சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

அப்போது அவர் ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு ஈட்டச் சலுகை வழங்கியதாகப் புகார் எழுந்தது.

அதையொட்டி அவரை சி பி ஐ கைது செய்தது.

அதன்பின் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளி வந்தார்.

ப சிதம்பரத்தின் ஜாமீன் உத்தரவை மறு ஆய்வு செய்து ரத்து செய்ய சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ மனுவைத் தள்ளுபடி செய்து ப சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்ய  முடியாது என அறிவித்துள்ளது.