டெல்லி:
நாடுமுழுவதும் போலீஸ் படைகள் திருத்தி அமைக்கவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம்
மறுத்துவிட்டது.
பாஜகவின் பத்திரிகை தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யா, போலீஸ் படைகளில் சீர்திருத்தம் கொண்டுவர மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தமனு தலைமை நீதிபதி ஜேஎஸ் கெஹார் மற்றும்
நீதிபதிகள் சந்திரசூட், எஸ் கே கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது
பேசிய நீதிபதிகள், “போலீஸ் படை சீர்திருத்தம் குறித்து நாங்கள் தரும் தீர்ப்பை யாரும் மதிப்பதில்லை” என்று கூறியதுடன் இதை அவசர வழக்காக
எடுத்துக் கொள்ளமுடியாது என்றும் தெரிவித்தனர்.