டெல்லி
உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன்மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இன்று நீதிபதி அபய்.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்ற போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள 3 வழக்குகளையும் விசாரிப்பீர்களா? என்று அமலாக்கத்துறைக்யீ கேட்டதற்கு அனைத்தும் விசாரிக்கப்படுவதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது. நீதிபதிகள் அமலாக்கத்துறை அளித்த பதில்களை பதிவு செய்தனர்.
தற்போது இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து உச்சநிதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.