டெல்லி
உச்சநிதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது
கடந்த திங்கள் கிழமை செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பில்
”உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்
என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை வேறு தினம் மாற்றி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை புதன்கிழமை (24-07-2024) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடந்தபோது இந்த விசாரணையில் வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் பென்டிரைவ் கைப்பற்றப்பட்டத்தில் தனது பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என வாதிடப்பட்டது.
கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் உள்ளன என அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பி, இதற்கு பதில் இல்லை என்றால் நாளை பதிலோடு வந்தால் விசாரிப்பதாக கூறி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.