கமதாபாத்

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கோத்ரா கலவர விசாரணை ஆணைய உறுப்பினருமான நானாவதி மாரடைப்பால் உயிர் இழந்தார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கிரிஷ் தகொர்கோல் நானாவதி ஆவார்.  இவர் சுருக்கமாக நானாவதி என அழைக்கப்பட்டர்.  கடந்த 1935 ஆம் ஆண்டு பிறந்த நானாவதி 1658 ஆம் வருடம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார்

கடந்த 1979 ஆம் வருடம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  தவிர இவர் ஒடிசா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் ஆவார்.   இவர் 1984 இல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைத்த விசாரணை ஆணைய தலைவராக இருந்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நானாவதி இடம் பெற்றிருந்தார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு அதற்கான அறிக்கையை அளித்துள்ளார்.  நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள தனது வீட்டில் இதய செயலிழப்பு காரணமாக தனது 86 ஆம் வயதில் மரணம் அடைந்துள்ளார்.