டில்லி
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், செய்தியாளர்களிடம், ‘குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள், அவர்களது ஏமாற்று வேலைகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும்’ என்று தெரிவித்துள்ளார்
இதையொட்டி அவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாகத் தேஜஸ்வி யாதவ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றம் இதைப் பதிவு செய்து குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள் எனப் பேசியதாகத் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.