டெல்லி
உச்சநீதிமன்றம் அரசு பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை பாதியில் மாற்ற முடியாது என அறிவித்துள்ளது.
நேற்று அரசுபணிக்கான ஆள் தெர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.எஸ்.நரசிம்ஹா, பங்கஜ் மிதல் மற்றும் மனோஷ் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்
“பணியிடத்துக்கான ஆள் தேர்வு முறை அதற்கான விளம்பரங்கள் வெளியிடுவதில் தொடங்கி காலி பணியிடங்களை நிரப்புவதில் நிறைவடைகிறது. ஏற்கனவே இருக்கும் விதிகள் அனுமதிக்காத வரை ஆள்சேர்ப்பு தகுதிகளுக்கான விதிகளை பாதியில் மாற்ற முடியாது.
ஒருவேளை விதிகள் அவ்வாறு செய்வதற்கு அனுமதி அளித்தாலும், அது தன்னிச்சையானதாக இருக்கக்கூடாது. அது பிரிவு 14 மற்றும் பிரிவு 16 ஆகியவைகளின் விதிகளுடன் இணைக்கமாக இருக்க வேண்டும்
வெளிப்படைத்தன்மை மற்றும் பாகுபாடு இல்லாதது பொது ஆள்சேர்ப்பு செயல்முறையின் தனிச்சிறப்பாக இருக்க வேண்டும். நடுநிலையில் விதிகளை மாற்றுவதால் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர் ஏமா்ந்து விடுவார்0எ
எனத் தெரிவித்துள்ளனர்..