டெல்லி: ‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரச கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளது.
தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ரத்து செய்துள்ளதுடன், இதன்மூலம் பெற்ற பணத்தை பணத்தை அரசியல் கட்சிகள் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
அரசியல் கட்சியினருக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வகை செய்கின்றன. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும் இந்த பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த தேர்தல் பத்திரங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளன தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கி வெளியிடும். இந்திய குடியுரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி, ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை அரசியல் கட்சிகளுக்கு நிதி அனுப்பலாம். தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயா தாக்கூர், ஸ்பேண்டர் பிஸ்வால் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஹன்சாரியா, பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோர் வாதிட்டனர். மத்திய அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தேர்தல் நிதி பத்திர திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் 19(1)(அ) விதியை மீறுவதாகவும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கருதுகிறது. தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட கம்பெனி சட்டம் அரசமைப்புக்கு எதிரானது தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்த சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்த சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்குவது க்விட் ப்ரோகோ ஏற்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரே திட்டம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அல்ல. வேறு மாற்று வழிகளும் உள்ளன. கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தகவல் அறியும் உரிமை மீறல் நியாயப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
வங்கிகள் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை எஸ்பிஐ அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் – மார்ச் 13க்குள் ECI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட அனைத்துத் தொகைகளையும் திருப்பித் தருமாறு அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகள் அதன் பிறகு தேர்தல் பத்திரத் தொகையை வாங்குபவர்களின் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும்அத்துடன் நிதிச் சட்டம் 2015 திருத்தங்கள் நிபந்தனையற்ற திட்டத்தை செயல்படுத்துகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நிதியுதவியை அனுமதிக்கும் மத்திய அரசின் எலெக்டோரல் பாண்ட் திட்டத்தின் சட்டப்பூர்வ செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் ஒருமனதாக பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இது மத்திய பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த பத்திரம் மூலம் அதிக நிதி உதவி பெற்றது பாரதிய ஜனதா கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.