டெல்லி
கர்நாடக உயர்நீதிமன்ற் நீதிபதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்றதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேதவியாச ஸ்ரீஷானந்தா குத்தகை ஒப்பந்தம் மற்றும் நில உரிமையாளர்களின் அதிகாரங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் தேவைப்படும் சில திருத்தங்கள் தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது.
விசாரணையின் போ பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று நீதிபதி குறிப்பிட்டார். நீதிபதி பாகிஸ்தான் என குறிப்பிட்ட அந்த பகுதி பெங்களூரு நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோரி பல்யா எனும் பகுதியாகும். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மட்டுமின்றி பெண் வழக்கறிஞரிடமும் சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த வீடியோ க்ளிப்பும் வெளியானது.
எனவே இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டபோது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவைஎன கண்டனம் தெரிவித்து இது தொர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இன்னும் 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.