சென்னை: எஸ்சி சாதி சான்றிதழ் முறைகேடு அதிகரித்து வரும் நிலையில்,   இந்து, பவுத்தம் தவிர மற்ற மதத்தினர் எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால், அது ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர  பட்நாவிஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் தோன்றிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும். அதாவது, இந்து, பவுத்தம், சீக்கியம் மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் முறைகேடாக எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால் அது ரத்து செய்யப்படும் என மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மாற்று மதத்தை சேர்ந்த நபர்கள் இந்துக்கள் எனக்கூறி எஸ்சி சான்றிதழ் பெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்கள் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தடுக்கும் விதமாக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பிற மதத்தினர் எஸ்சி சான்றிதழை முறைகேடாக வைத்திருக்கும் பட்சத்தில் அது ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பட்நாவிஸ்,  இந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் சீக்கியர்கள் தவிர வேறு யாருடைய SC சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும் என்றவர்,  இந்து மதம், பௌத்தம் அல்லது சீக்கியம் அல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் மோசடியாக பட்டியல் சாதி சான்றிதழைப்பெற்று  அரசு வேலைகள் போன்ற இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற்றிருந்தால், அத்தகைய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

“இந்து மதம், பௌத்தம் மற்றும் சீக்கியம் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த ஒருவர் SC சான்றிதழ் அல்லது இடஒதுக்கீட்டைப் பெற்றிருந்தால், அவர்களின் செல்லுபடியாகும் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உரிய நடைமுறையுடன் ரத்து செய்யப்படும் என்றவர்,  “மோசமாகப் பெற்ற சாதிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சலுகைகளைப் பெற்றவர்களிடமிருந்து (பணப் பலன்கள்) மீட்க பரிந்துரைக்கப்படும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் எந்த மதத்தையும் பின்பற்றலாம் மற்றும் மற்றொரு நபரை ஒப்புதலுடன் மதம் மாற்றலாம், ஆனால் சட்டம் வலுக்கட்டாயமாகவோ, ஏமாற்றவோ அல்லது மதமாற்றத்திற்காக தூண்டவோ அனுமதிக்காது என்று முதலமைச்சர் கூறினார்.

கணவரின் மதத்தை மறைத்து பெண்கள் திருமணத்தில் ஏமாற்றப்பட்ட வழக்குகள் பல  உள்ளன என்று  தெரிவித்த முதல்வர் பட்நாவிஸ்,  சாங்லியில் ஒரு பெண் ரகசியமாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு வழக்கை அவர் மேற்கோள் காட்டினார். அந்தப் பெண் சித்திரவதைக்கு ஆளானார், மேலும் தனது மதத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டார், இதன் விளைவாக அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது இறந்தார் என்பதை சுட்டிக்காட்டிய முதல்வர், மாற்று மதத்தவர் எஸ்சி சான்றிதழ் ஏமாற்றி பெற்றிருக்கிறார்கள், அது ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

மதம் மாறிய பலர் மற்றும் வெளிநாடுகளில் வந்து குடியேறியுள்ள அகதிகள் எஸ்சி சான்றிதழ் பெற்று அரசின் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். அதை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உருவெடுத்து உள்ளன.  பலர்  எஸ்சி சான்றிதழ் பெறுவதற்காகவே தாங்கள் இந்த மதம் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ மத்தில் இருந்து, எஸ்சி வகுப்பினருக்கான சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.  அதிக அளவில் அரசு பணிகளில் இதுபோற் முறைகேடுகள் உள்ளன. இதுதொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெவிக்கிறது. ஆனால், எஸ்சி சான்றிதழ் முறைடுகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஏற்கனவே உச்சநீதிமன்றம்,  ‘போலி சான்றிதழ்களைத் தடுப்பதற்காக பல்வேறு உத்தரவுகளை போட்டுள்ள நிலையில்,  மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு, எஸ்.சி., – எஸ்.டி., ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்ற புதிய வழிகாட்டுதல்களின் படி, சென்னை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை தலைமைஇடங்களாக கொண்டு, மண்டல அலுவலகங்கள் திறந்துள்ளது.

அதன்படி, எஸ்.சி., – எஸ்.டி., ஜாதி சான்றிதழ்  கோரி மாநிலம் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கப்படும்  விண்ணப்பங்கள், மண்டல அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்படும்.மண்டல அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர், விண்ணப்பதாரரின் முகவரிக்கு சென்று, விவரங்களை சேகரித்து, விண்ணப்பத்தின் உண்மைத் தன்மையை, மாநிலம் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். இந்த பரிந்துரையின் அடிப்படையில், எஸ்.சி., – எஸ்.டி., வகுப்பினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் கோருபவர் பொய்யான தகவல்களை அளித்தால், அவர் இந்திய தண்டனை சட்டத்தில் தண்டிக்கப்படவும், மண்டல அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.பொய்யான தகவல்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அவர் உள்ளாட்சி, சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்படும். மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்தவும், போலீசாரை நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.