டில்லி
கோவா மாநிலத்தில் உள்ள 88 சுரங்க உரிமத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கோவாவை ஆளும் பாஜக அரசு இரும்பு மற்றும் மாங்கனீசு எடுக்க 88 சுரங்கங்களுக்கு உரிமத்தை புதுப்பித்தது. அதன்படி இந்த சுரங்கங்கள் இன்னும் 20 ஆண்டுகள் இயங்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புதன்கிழமை அன்று தீர்ப்பு அளித்துள்ளது.
அந்த தீர்ப்பில், “கோவா மாநிலத்தில் அரசால் புதுப்பிக்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதையொட்டி 88 சுரங்கங்க்ளும் வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் அனைத்து நடவடிக்கைக்ளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் ஆய்வு செய்ததில் இந்த சுரங்க உரிமம் நீட்டிப்பு முறைகேடாக நடந்துள்ளது. அவசர அவசரமாக சட்டத்திற்கு புறம்பாக அளிக்கப்பட்ட இந்த உத்தரவுகள் செல்லாது.” என தெரிவித்துள்ளது.