டெல்லி: முதல்வர் பதவியை வைத்து  டெல்லி மாநில முதல்வர் கேஜரிவால் நாடகமாடுகிறார், பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பாசாங்கு செய்கிறார்,  முன்னாள் எம்.பி.யான காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப்தீக்சித் விமர்சித்து உள்ளார்.

உச்சநீதிமன்றம் அவருக்கு  பல கண்டிஷன்களுடன் ஜாமின் வழங்கி உள்ளது. அவரால் முதல்வர் பணியாற்ற முடியாது. அதற்கு விதித்துள்ளது.  அதனால் மக்களை ஏமாற்ற ராஜினாமா என கூறி வருகிறார் என்றும்,  கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீட்சித் தெரிவித்துள்ளார்.

ஜாமின் விடுதலையான, கெஜ்ரிவால் இரண்டு நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்வதாகவும், டெல்லியில் முன்கூட்டியே தேர்தலைக் கோருவதாகவும் கூறினார். மக்கள் தனக்கு “நேர்மைக்கான சான்றிதழை” கொடுக்கும் வரை முதல்வர் நாற்காலியில் உட்கார மாட்டேன் என்று  சபதம் செய்தார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த ஐந்தரை மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி மாநில முதல்வர், தனது பணியை செய்ய முடியாத நிலையில், தற்போது ஜாமின் வெளியாகி உள்ள நிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறி வருகிறார்.  இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று ஒருமுறை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கெஜ்ரிவால், தற்போது மீண்டும்  தனது முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக செப்டம்பர் 15ந்தி அன்று அறிவித்தார். மேலும்,   மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பேன் என்றும், பொதுமக்கள் தன்னை இந்த பதவியில் அமரச் சொன்னாலன்றி மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள ஆம்ஆத்மி  கட்சித் தலைமையகத்தில் தொண்டர்களிடம் பேசிய அவர், “தேர்தல் நடைபெறும் வரை வேறு ஒரு தலைவர் டெல்லி முதல்வராக இருப்பார்” என்று தெரிவித்தார். அவரது கூற்றின் படி, இரண்டு நாட்களுக்குள் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி அதில் புதிய முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும்)

நான்  ”மக்கள் மத்தியில் செல்வேன். ஒவ்வொரு தெருவாக செல்வேன், வீடுவீடாக செல்வேன். கேஜ்ரிவால் நேர்மையானவர் என்று பொதுமக்கள் தீர்ப்பு வழங்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன்,” என்று கேஜ்ரிவால் அறிவித்தார்.

அவரது அறிவிப்பு ஒரு ’நாடகம்’ என பா.ஜ.க கூறியுள்ளது. ஆனால் அவரது ராஜினாமா அறிவிப்புக்குப் பிறகு பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவரது ராஜினாமா நாடகம், அரியானா தேர்தலுக்கான என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

மேலும் டெல்லியில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது . மதுபான கொள்கை  ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த  ஐந்து மாதங்கள் சிறைக்குள் இருந்து அரசை நடத்தி வந்த அரவிந்த் கேஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தின் கருணாயால் ஜாமின் பெற்று  செப்டம்பர் 13 ஆம் தேதி  திகாரில் இருந்து,  வெளியே வந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த திடீர் முடிவை அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் பாணியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.  மக்களை ஏமாற்றவே அவரது  ராஜினாமா  நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்றும், மக்களிடம் தன்மீது அனுதாபம் கொள்ளவே இந்த ராஜினாமா நாடகத்தை அரங்கேறி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உண்மையிலேயே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தால், அவர்  ”கைது செய்யப்பட்ட உடனேயே  தனது பதவியை  ராஜினாமா செய்திருக்க முடியும். ஏனெனில் இதற்கு முன்பும் கைது செய்யப்பட்ட தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்,” ஆனால், அவர் அதை செய்யாமல், தற்போது  சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ராஜினாமா செய்வதாக கூறுவது அரசியல் வித்தை என்று என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கூறியள்ள காங்கிரஸ் மூத்த தலைவரான, சந்தீப் தீக்சித்,  அரவிந்த் கேஜரிவால் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து நாடகமாடுகிறார் என்று  கடுமையாக விமர்சனம் நடத்தியுள்ளார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கேஜரிவால் முக்கிய தலைவராகவும், மற்ற கட்சி உறுப்பினர்கள் வீட்டு வேலைக்காரர்கள் என்று விமர்சித்ததுடன்,  ஆம் ஆத்மி கட்சிக்குள் முடிவெடுக்கும் செயல்முறையில் சந்தேகம் ஏற்படுவதாகவும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து நாடகம் நடத்துவதாகவும் அவர் கூறினார்.

கட்சியில் பொம்மையாகச் செயல்படும் விசுவாசிகள் முக்கிய பதவிகளில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே கட்சியின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.. அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தால்.. அடுத்த முதல்வர் யார்? அடுத்த முதல்வர் யார் என்று ஆம் ஆத்மி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், கட்சியில் பாசாங்கு செய்கின்றனவர் என்று கூறியுள்ளார்.