டில்லி

டும் நிதிநிலை நெருக்கடியால் தவிக்கும் யெஸ் வங்கியின் 449% பங்குகளைப் பாரத ஸ்டேட் வங்கி வாங்க முன்வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் கடும் நிதிநிலை நெருக்கடி ஏற்பட்டது.  இதனால் வங்கியின் இயங்கும் செலவுக்கான நிதியும் இல்லாத நிலை ஏற்பட்டது.   இந்த நிலைய மாற்ற ரிசர்வ் வங்கி இந்த வங்க்யின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டது.  வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.  அத்துடன் வங்கி ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஊதியத்துக்கு உத்திரவாதம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   ஆயினும்  முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது.

யெஸ் வங்கியின் நிலையை மேம்படுத்த அதன் பங்குகளை வாங்குமாறு இந்திய அரசு பாரத ஸ்டேட் வங்கியை கேட்டுக் கொண்டது.  அதற்கு இணங்க யெஸ் வங்கியின் 49% பங்குகளை ரூ.2450 கோடிக்கு வாங்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.  ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் யெஸ் வங்கியின் ஃப்முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை என ஏற்கனவே கூறி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.