டில்லி:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1771 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ.யின் பெரு நகர வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.5 ஆயிரம், நகர்புறத்தில் ரூ.3 ஆயிரம் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது. தவறிவால் அபராதம் பிடிக்கும் நடைமுறையை எஸ்பிஐ அமல்படுத்தியது.
இந்த வகையில் இதுவரை எஸ்பிஐ ரூ.1771.77 கோடியை அபராதமாக வசூலித்திருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ்பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.