புதுடெல்லி:
நாட்டை காக்க வீரதீர செயல்கள் புரிந்த 86 பேருக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
award
வீரதீர செயல்களை புரிந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் அசோக சக்ரா போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.
அஸ்ஸாம் 35 வது ராஷ்டிரீய ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த ஹவில்தார்  ஹங்க்பான் தாதா-வுக்கு அசோக சக்ரா விருது இவர், ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சண்டையில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இந்த தாக்குதலின்போது, ஹங்க்பான் தாதா வீர மரணமடைந்தார்.
இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது இன்னுயிரை கொடுத்து இந்த நாட்டையும், சக வீரர்களையும் காத்த ஹங்பன் டாடாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது.
பதான்கோட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த லெப்டினன் கர்னல் நிரஞ்சன் உள்ளிட்ட 11 பேருக்கு சகுர்ய சக்ரா ( Shaurya Chakra) விருது வழங்கப்பட உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவரின் உடலில் இருந்த வெடிகுண்டை தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையை சேர்ந்த அதிகாரி நிரஞ்சன் அகற்ற முயன்றார். அப்போது அந்த குண்டு வெடித்ததில் நிரஞ்சன் வீரமரணம் அடைந்தார். கேரளாவை சேர்ந்த நிரஞ்சனுக்கு ‘சவ்ரி சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இத்துடன் மேலும் 13 சவுரி சக்ரா விருதுகள், 67 சேனா பதக்கங்கள் என மொத்தம் 82 விருதுகள் பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதைப்போல வீரதீர செயல்களில் ஈடுபட்ட 948 மத்திய–மாநில போலீசாரும், 67 தீயணைப்பு வீரர்களும் ஜனாதிபதி பதக்கத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்ட 31 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இந்த விருதுகள் அனைத்தும் இன்று டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவின் போது வழங்கப்படுகின்றன.