டெல்லி: சாவர்க்கருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டாரே தவிர, அவர் நிரபராதி என்று விடுவிக்கப்படவில்லை என்று காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1948 ஜனவரி 30ம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள மகாத்மா காந்தி சென்றபோது, அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8 பேரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே இருவருக்கும் 1949, நவம்பர் 15ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்கில், காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்களில்  மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று சேர்க்கப்பட்டவர் சாவர்க்கர். பின்னர் அந்த வழக்கில் சாவர்க்கர் நிரபராதி என்று நிரூபிக்கப்படவில்லை.

இந் நிலையில், சாவர்க்கருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறி இருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அவர் (சாவர்க்கர்) நிரபராதி என்று நீதிமன்றம் சொல்லவில்லை.

அந்த வழக்கில், நாங்கள் அளித்த ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லை. அதனால் தான் அவர் விடுவிக்கப்பட்டாரே தவிர, சாவர்க்கர் நிரபராதி இல்லை என்று ஒருபோதும் சொல்லவில்லை. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க சங் பரிவாரங்கள் முயல்கின்றன.

காந்தியின் கொலையில் உண்மையில் நிகழ்ந்தது என்ன என்பதை இந்த தருணத்தில் நாம் அனைவரும் எண்ணி பார்க்கப்பட வேண்டும் என்றார்.

 

[youtube-feed feed=1]