ரியாத்,

சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. இதனால் அங்கு பெண்கள் கார் ஓட்ட அனுமதி கிடையாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டு முதல் மகளிர் உரிமை சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையும் மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை நீக்கத்தை தொடர்ந்து சவுதியில் உள்ள இளவரசி நொரா பல்கலைகழகத்தில் பெண்களுக்கான டிரைவில் ஸ்கூல் தொடங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.