ரியாத்
சவுதி அரேபிய மன்னர் சல்மான் உடல்நிலை சீராக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு உடல்நிலை பரிசோதனை நடத்த வேண்டி உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்ட்து. கடந்த மார்ச் 19 ஆம் தேதி அன்று தொலைக்காட்சி வாயிலாக அவர் மக்களைச் சந்தித்த பிறகு எந்த நிகழ்விலும் கலந்துக் கொள்ளவில்லை.
இன்று சவுதி அரேபிய அரசு ஊடகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “மன்னர் சல்மானுக்கு பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டதால் அவர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் நிலை சீராக நலமுடன் உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குவைத், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களும் தொலைப் பேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை நலம் விசாரித்ததாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சல்மானுக்கு தற்போது 84 வயதாகிறது