ரியாத்:
வுதி அரேபியா நாட்டில் புதித தலங்களான மதினா, காடிஃப் ஆகிய இரு நகரங்கள் அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2
இஸ்லாமியர்களின் திருநாளான ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதினா, காடிஃப்  ஆகிய இஸ்லாமிய புனித நகர்களில் உலகெங்கில் இருந்தும் இஸ்லாமியர்கள் இந்நகர்களுக்கு வந்து வழிபாடு செய்வார்கள்.  அப்படி பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் தற்காலை படை தாக்குதல் நடந்துள்ளது.  இதில் பலர் உயி்ர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெதினாவை குறிக்கும் வரைபடம்
மெதினாவை குறிக்கும் வரைபடம்

காடிஃப் நகரில் சிறுபான்மையினராக ஷியா முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.அவர்களது மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இதேபோல், ஜெத்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.
1
இஸ்லாமியர் ஈகை திருநாளான ரமலான் பண்டிகை கொண்டாட இருக்கும் நேரத்தில் இக் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.