ரியாத்:
ந்தே பாரத் திட்டத்தின் படி, சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தே பாரத் திட்டத்தின் படி, சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல் விமானம் மே 19-ஆம் தேதி ரியாத்தில் இருந்து கிளம்பி கோழிக்கோடு செல்ல உள்ளதாகவும், இதே நாளில் மற்றோரு விமான ரியாத்தில் இருந்து டெல்லி வர உள்ளது. இதே போன்று மே 20-ஆம் தேதி ரியாத்லிருந்து கான்பூருக்கும், டாம்மமிலிருந்து பெங்களூருக்கும், மற்றொரு விமானம் ஜட்டாவில் இருந்து விஜயவாடாவுக்கும் பறக்க உள்ளது. இதுமட்டுமின்றி வரும் மே 23-ஆம் தேதி ரியாத்தில் இருந்து விஜயவாடவுக்கும் ஒரு விமானம் செல்ல உள்ளதாகவும் அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமானங்களுக்கான டிக்கெட் கட்டணம் குறித்த தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும், இந்த விமானங்கள், ரியாத்தில் இருந்து கிளம்பி, இந்தியாவின், சென்னை, மும்பை, லக்னோ மற்றும் பட்னா ஆகிய நகரங்களுக்கு பயணிக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.