கெய்ரோ:
சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் எகிப்த்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சவுதி அரேபியா இளவரசராக முகமது பின் சல்மான கடந்த ஆண்டு முடி சூட்டப்பட்ட பின்னர் முதன் முறையாக வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
இந்த வகையில் வரும் 7ம் தேதி அவர் லண்டன் செல்கிறார். இதற்கு முன்பே எகிப்த் செல்ல திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் விமானநிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு 19ம் தேதி செல்கிறார்.
சவுதி அரேபியாவுடன் எகிப்து சுமூக உறவை கடைபிடித்து வருகிறது. ஈரான் ஆதரவுடன் ஏமனில் அல் ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு எகிப்த் ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு கத்தார் நாட்டுடன் ஏற்படுத்தப்பட்ட ராஜாங்க உறவு துண்டிப்பு நடவடிக்கையிலும் எகிப்து இணைந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.