பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அந்நாட்டு எம்பிக்கள் தங்கத் துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளனர்.

gold

பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றார். அப்போது அந்நாட்டு தலைவரை தனது நாட்டுக்கு வரும்படி இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் உட்பட சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு புதிய ஒப்பந்தங்கள் கையெத்தாகின. பாகிஸ்தான் அதிபர் ஆரில் ஆல்வியை சந்தித்த சவுதி இளவரசர் முக்கிய ஆலோசனைகளை நடத்தினர். அதன்பின்னர் பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருந்தான நிஷான் இ பாகிஸ்தான் என்ற விருந்து சவுதி இளவரசருக்கு வழங்கப்பட்டது.

இதுஒருபுறம் இருக்க காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் உயிரிழந்தது உலகளவில் கவனத்தை ஈர்த்தது. பல நாடுகள் பாகிஸ்தானிற்கு எதிராக குரலெழுப்பின. இந்த சூழலில் சவுதி மன்னர் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்தது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தங்கள் நாட்டிற்கு வருகை தந்த சவுதி இளவரசருக்கு பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர்கள் சார்பில், தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இது ஹெக்லர் அண்ட் கோச் எம்பி5கே ரக துப்பாக்கி ஆகும். சுற்றுப்பயணத்தின் போது இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்த இளவரசரை காணச் சென்ற பாகிஸ்தான் செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ரானி தங்க முலாம் பூசிய துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளார்.