ரியாத்: ரம்ஜானை ஒட்டி தொழுதலை ஒளிபரப்ப தடை மற்றும், ஒலி பெருக்கி சத்தத்தை குறைப்பது உள்பட பல்வேற கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா அரசு அறிவித்து உள்ளது. இது அந்நாட்டு இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ரம்ராஜன் மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனப்டி, ஒலிபெருக்கிகள் தடை, தொழுதலை ஒளிபரப்ப தடை மற்றும் மசூதிகளுக்குள் இப்தார் செய்ய வழிபாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், அரபு நாடுகளில் இரண்டாவது பெரிய நாடு சவூதி அரேபியா. அங்கு 93 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் முக்கிய பண்டிகை காலம் ரமலான் நோன்பு. இது வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, சவூதி அரேபியாவில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மசூதிகளில் ஒலிபெருக்கிகளின் ஒலியின் வரம்பை குறைத்தல், நன்கொடைகளை கட்டுப்படுத்துதல், மசூதிகளுக்குள் தொழுகைகளை ஒளிபரப்புவதை தடை செய்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுதொடர்பான உத்தரவை, சவூதி அரபியாவின், தவா மற்றும் வழிகாட்டுதல்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லதீஃப் பின் அப்துல்லாஜிஸ் அல்-அல்-ஷெய்க் பிறப்பித்துள்ளார். ரமலான் மாதத்தில் சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய 10 அம்ச வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மசூதிகளில் தொழுகை செய்பவர்களுக்கு உணவு வழங்க மசூதி நன்கொடை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய உணவுகள் தயாரிக்கப்பட்டு மசூதிக்குள் அல்லாமல் மசூதி முற்றங்களில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்க வேண்டும்.
இமாம் (இஸ்லாமிய வழிபாட்டுச் சேவைகளை வழிநடத்துபவர்) மற்றும் முஸ்ஸின் (மசூதியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தினசரி தொழுகைக்கான அழைப்பை அறிவிக்கும் அதிகாரி) ஆகியோரின் பொறுப்பில் உணவு வழங்க வேண்டும்.
அதி தீவிர அவசிய காலத்தை தவிர்த்து, மற்ற எல்லா நேரங்களில் இந்த மாதம் முழுவதும் இந்த இரண்டு அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும்.
மாலை நேரத்தில் தொழுபவர்களுக்கும் இரவு நேரத்தில் தொழுகைகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போதுமான நேரத்துடன் தொழுகையை முடிக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மசூதிகளுக்குள் தொழுகை மற்றும் வழிபாட்டாளர்களின் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்கு புகைப்படம் எடுப்பது மற்றும் கேமராக்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழிபாடு செய்பவர்கள் குழந்தைகளை மசூதிகளுக்கு கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளை போலவே, தொழுகைக்கான அழைப்பை வெளியிடும் ஒலிபெருக்கிகளின் ஒலி வரம்பை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மசூதியைப் பற்றிய பயனுள்ள புத்தகங்களைப் படிக்க வழிபாடு செய்பவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
சவூதி அரசின் இந்த கட்டுப்பாடுகள் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.